தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு ஊர்வலம்
உடுமலை; உடுமலையில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. எஸ்.கே.பி., கல்விக் கழகத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேசநாராயணன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியம், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விளக்கினார். உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் பிரபு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நகரின் பிரதான ரோடுகள் வழியாகச்சென்று, விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்து விளக்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கருப்புசாமி நன்றி கூறினார்.