சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; 'சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், கருப்புத்துணியை கண்ணில் கட்டி, கருப்புக்கொடி கையிலேந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் ஆர்.கருப்பன், இணை செயலாளர் கருப்பன், கோட்ட செயலாளர் ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.