மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை கூட்டம்
07-Jan-2025
உடுமலை; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின், மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும், அரசே நிர்வகித்து பராமரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் தாராபுரம் கோட்டத்தின் சார்பில், மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.சங்கத்தின் கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். கோட்ட இணைசெயலாளர் சிவக்குமார் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மதுசூதனன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.கையெழுத்து இயக்கம் நேற்று (20ம் தேதி) துவங்கி பிப்., 28 ம்தேதி வரை நடக்கிறது. சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர். சங்கத்தின் கோட்டப்பொருளாளர் முருகசாமி நன்றி தெரிவித்தார்.
07-Jan-2025