உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

உடுமலை; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், ரோட்டோரத்தில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் மேற்கொண்டனர்.உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால், பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில், நகர எல்லையில், மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.பருவமழை காலத்தில், அப்பகுதியில், மண் குவிந்தும், செடிகள் முளைத்து காணப்பட்டது. மேலும், ரோட்டோரத்தில், ஆங்காங்கே மண்ணும் குவிந்து கிடந்ததால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மையத்தடுப்பு பகுதியில் செடிகளும், ரோட்டோரத்தில் மண் அகற்றும் பணியும் நேற்று மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை