உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரம் கழிவு; சுகாதார சீர்கேடு

ரோட்டோரம் கழிவு; சுகாதார சீர்கேடு

பல்லடம்; தொழில் நகரங்களான திருப்பூர் - கோவைக்கு இடையே பல்லடம் நகரம் அமைந்துள்ளது. தினமும், ஏராளமான சரக்கு வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள், வேன்கள் பல்லடம் வழியாக வந்து செல்கின்றன. இவ்வாறு, வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், ரோட்டோரங்களில் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.பிளாஸ்டிக் பாட்டில்கள், பயன்பாடற்ற இரும்பு பொருட்கள், பழைய துணி, சாக்குப்பை, அழுகிய காய்கறி மற்றும் பழங்கள் தெர்மாகோல், கோழி முட்டை கழிவுகள் என, மக்கும் மக்காத குப்பைகள் உள்ளிட்டவை, பரவலாக கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலை ஓரங்களில் தான் இவை அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கழிவுகளை உண்ணும் விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி