சுற்றித்திரியும் குரங்குகள்; அவிநாசியில் மக்கள் அச்சம்
அவிநாசி; அவிநாசியில் கடந்த ஒரு சில வாரங்களாக இரண்டு குரங்குகள் ஒன்றாக சுற்றி திரிகிறது.மரங்கள் நிறைந்துள்ள உள்ள தாலுகா அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், பார்க் வீதியில் உள்ள பூங்கா, மாமரத் தோட்டம், பாரதிதாசன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தங்குகிறது.சர்வ சாதாரணமாக பகல் பொழுதில் வீடுகளில் ஜன்னல் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பழ வகைகள், தின்பண்டங்களை எடுத்து சாப்பிடுவதும், தண்ணீர் அருந்துவது, மளிகை கடைகளில் முன்பு தொங்க விடப்படும் உணவு பொட்டலங்களை துாக்கிச் செல்வது என அட்டகாசம் செய்து வருகிறது.இதுவரை பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் சுற்றி வந்தாலும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிகள் அதிகம் உள்ள நகர் பகுதியில் சுற்றித் வருவதால் குழந்தைகளை கடித்துவிடும் என்ற பயத்தில் பெற்றோர்களும் உள்ளனர்.எனவே, வனத்துறையினர் உடனடியாக சுற்றித் திரியும் இரண்டு குரங்குகளையும் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்.