மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
21-Nov-2024
மார்கழிக்குளிர் நடுங்க வைக்கும். வீட்டுக்குள் இதமான மெத்தையில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அயர்ந்து உறங்குவது தனி சுகம்; அதேசமயம், ஆதரவற்றோர் பலர், சாலையோரம், பனியின் தாக்கம் நெஞ்சை உறைய வைத்தாலும் நடுங்கிக்கொண்டே உறங்கும் காட்சிகளையும் கண்ணுற்றிருப்போம்.மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் போல், அவர்களுக்கு ஏதேனும் போர்த்துவதற்கு ஒரு துணியையாவது கொடுத்துவிட முடியாதா என்று நம்மில் யாருக்கேனும் மனம் ஏங்கியிருக்கும். அப்போது அது முடியாமல், நம்மை ஆற்றுப்படுத்திக் கடந்திருப்போம்.இத்தகைய சேவைக்காக, திருப்பூர் வடக்கு - திருப்பூர் - தெற்கு - பாரதி - யுனைடெட் ரோட்டரி சங்கங்கள், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகியன இணைந்து 'பெட் அண்ட் பெட் ஷீட் சேலஞ்ச்' என்ற திட்டத்தை கடந்த 2010ல் துவக்கினர்.ஆண்டுதோறும் டிசம்பரில், இரவில், திருப்பூரில் பொது இடங்களில் தங்கும், வீடற்ற ஆதரவற்றோருக்கு கடும் குளிரை எதிர்கொள்ளும் வகையில் போர்வைகளை வழங்குவதும், பிறருக்கும் 'சேலஞ்ச்' அறிவித்து அவர்களும் இந்தச் சேவையைத் தொடரச் செய்வதுமே இத்திட்டம்.இந்தாண்டுக்கான திட்டம் திருப்பூர் பிஷப் பள்ளி அருகில் துவங்கியது. ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், உதவி ஆளுநர்கள் கொடியசைத்து துவக்கினர். மத்திய பஸ் ஸ்டாண்ட், அங்கேரிபாளையம் சாலை என பல்வேறு இடங்களிலும் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.ரோட்டரி சங்க தலைவர்கள் ரவீந்திரன் காமாட்சி (திருப்பூர்), மோகனசுந்தரம் (தெற்கு), செல்லத்துரை (வடக்கு), கிருத்திகா தங்கராஜ் (பாரதி), அருண்குமார்(யுனைடெட்) மற்றும் ரோட்டரி, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரைடர்ஸ் கிளப் கேப்டன் ரவிசங்கர், வடக்கு ரோட்டரி பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.பதினான்கு ஆண்டாக தொடரும் இச்சேவையைப் பொதுமக்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.
21-Nov-2024