உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டவேட்ரில் உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்

ரோட்டவேட்ரில் உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் இரண்டு விவசாயிகளுக்கு, ரொட்ட வேட்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், உதவி இயக்குனர் பழனிகுமார், வேளாண் உதவி அலுவலர்கள் பாலாஜி, தங்கராஜ் ஆகியோர், கருவியை பார்வையிட்டனர்.அரசப்பன் கூறியதாவது: ரோட்டவேட்டர் கருவி பயன்படுத்தி உழவு செய்வதால், மண்ணின் தன்மை இலகுவாகிறது. நீர்ப்பிடிப்பு திறன் மேம்படுவதால், மண்ணில் ஈரப்பதம், காற்று எளிதாக உட்புகுந்து விடுகிறது. இதுனால், உயிர்ச்சத்து அதிகரித்து, மண் வளம் பெருகுகிறது. களைகள் துாளாக்கப்பட்டு, மண்ணுக்கு உரமாகிறது.குண்டடத்தில், நவனாரி கிராமத்தை சேர்ந்த சுந்தரம், வடுகபாளையம் கிராமத்தில் பழனாத்தாள் என்கிற பெண் விவசாயிக்கும் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது.குண்டடத்தில் சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டச்சத்துக்கள், உயிரியல் காரணிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை