உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்

விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்

பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தினர் மூன்று பேர், கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் தாக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, ஒரு அனுதாப அறிவிப்பு கூட வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவர்களது குடும்பத்தினர் வங்கியில் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.இக்கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவிநாசிபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்களிடம், ரவுடிகள் போல் பேசுவதாக, அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் கூறினார். பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்துக்கு ஆதரவாக, போராட்டம் நடத்திய விவசாயிகளை, 'ரவுடிகள்' என்று கூறிய இன்ஸ்பெக்டரை கண்டிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை