உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.22.25 லட்சம் மோசடி; ஈரோடு ஆசாமி கைது

ரூ.22.25 லட்சம் மோசடி; ஈரோடு ஆசாமி கைது

திருப்பூர்; பங்குச்சந்தையில் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 22.25 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஈரோட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்தவர் முனிவேல், 40. இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பங்குசந்தை முதலீடு தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அதில், இணைக்கப்பட்ட 'வாட்ஸ் அப்' லிங்க் மூலம் குழுவில் இணைந்தார். முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டதை உண்மையென நம்பி, பல தவணைகளாக, 22.25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.முதலீட்டை திரும்ப பெற முயலும் போது, மேலும் பணத்தை செலுத்துமாறு கூறினர். ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.முனிவேல் அனுப்பிய, 5 லட்சம் ரூபாய் 'எலைட் எக்ஸ்போர்ட்' என்ற நிறுவன வங்கி கணக்குக்கு சென்றிருந்தது. நிறுவன பங்குதாரர், ஈரோடை சேர்ந்த நவனீஷ், 35 கைது செய்யப்பட்டார். இரு மொபைல் போன்கள், வங்கி கணக்கு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:மோசடி குறித்து விசாரித்த போது, டெலிகிராம் மூலம் அறிமுகமான 'மிஸ்டர் ஜீ' மற்றும் இலங்கையில் வசிக்கும் நவனீஷின் மாமா சுதர்சன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதும், இதற்காக நவனீஷ் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெறுவதும் தெரிந்தது. சமூக வலைதளங்களில் வரும் பங்குசந்தை முதலீட்டுக்கான எந்த விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை