மேலும் செய்திகள்
'வாட்ஸ் ஆப்பில்' ரூ.10,000 'அபேஸ்'
01-Sep-2024
திருப்பூர் : அவிநாசியை சேர்ந்தவர் ராஜேஷ், 49; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார்.முதலீடு தொடர்பாக வழிகாட்டும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். அப்போது தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒருவர், தனக்கு தெரிந்த 'ஆப்பில்' முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என கூறி நம்ப வைத்தார்.இதனை நம்பி, பல தவணைகளாக, 24 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்த போது, மேலும், பத்து லட்சம் ரூபாயை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர். 'ஆப்' போலியானது என தெரிந்த ராஜேஷ் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.தனிப்படை போலீசார் விசாரித்தனர். ராஜேஷ் வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளின் விவரங்களை பெற்று விசாரித்தனர்.ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்து பணத்தை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட பழநியை மைதீன் பாட்ஷா, 37 மற்றும் மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி, 41 என, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
01-Sep-2024