ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்சம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
உடுமலை : உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டிரைவிங் லைசென்ஸ் எடுத்தல், புதுப்பித்தல், வாகன பெயர் மாற்றம், புதிய வாகனங்கள் பதிவு, வெளிமாநிலங்களுக்கு வாகனங்கள் இயக்க பர்மிட், வாகனங்களுக்கு எப்.சி., என பல்வேறு பணிகளுக்கு, தினமும், 300க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.இந்த அலுவலகத்தில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு தொகை லஞ்சமாக பெறப்படுவதாகவும், அரசு விதிகளுக்கு மாறாக கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் அலுவலர்களை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பஞ்சலிங்கம், ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.