உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக வீடு பழுது பார்க்கும் திட்டம்; 1,211 பயனாளிக்கு பணியாணை

ஊரக வீடு பழுது பார்க்கும் திட்டம்; 1,211 பயனாளிக்கு பணியாணை

திருப்பூர்; மாநில அரசின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பயனாளிகளுக்கு திட்ட பணிகளுக்கான ஆணைகளை வழங்கினர். அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 241 பயனாளிகளுக்கு, 7.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காணொலி காட்சி வாயிலாக, 10 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 970 பயனாளிகளுக்கு, 29.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம், 1,211 பயனாளிகளுக்கு, 36.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டது.

அரசு அச்சகம் திறப்பு

கலெக்டர் அலுவலகம் எதிரே, ராமசாமி முத்தம்மாள் மண்டப வளாகத்தில், அரசு அச்சக கிளை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன் அச்சகத்தை திறந்துவைத்தார். அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில், தமிழகத்தின் ஏழாவது கிளையாக திருப்பூரில் அரசு அச்சகம் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் அரசு துறை சார்ந்த அச்சு பணிகளுக்கு, சேலம் மாவட்டத்துக்கு செல்லவேண்டியிருந்தது.இந்த நான்கு மாவட்ட அரசு துறைகளுக்கான அச்சு பணிகள், இனி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும். பெயர் மாற்றம், எழுத்துப்பிழை சரி செய்வது என பொதுமக்களுக்கும் இந்த அச்சகம் பயன்தரும்.இவ்வாறு சாமிநாதன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை