உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.பெரியபாளையத்தில் புறம்போக்கு நிலம் மீட்பு

எஸ்.பெரியபாளையத்தில் புறம்போக்கு நிலம் மீட்பு

திருப்பூர்; எஸ்.பெரியபாளையத்தில் 80 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டு, வருவாய்த்துறை சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி தாலுகா, எஸ்.பெரியபாளையத்தில், அரசுக்கு சொந்தமான 80 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தில், தனியார் அமைப்பினர் 'அம்பேத்கர் நகர்' என்கிற பெயர் பலகை வைத்திருந்தனர். புறம்போக்கு நிலத்தில் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தனியார் அமைப்பினர் போர்டு வைத்துள்ளதாகவும், போர்டை அகற்றி, அரசு நிலத்தை மீட்க வலியுறுத்தியும், சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், மாவட்ட நிர்வாகத்தில் தொடர்ந்து மனு அளித்துவந்தார். இதனால், அப்பகுதியை பார்வையிட்ட வருவாய்த்துறையினர், தனியாரால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர். அந்த இடத்தில் தற்போது, அரசு சார்பில் அறிவிப்பு பேனர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், ஊத்துக்குளி உள்வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமம் புல எண் 20/1ல் உள்ள சாலை புறம்போக்கானது, அரசுக்கு சொந்தமான இடம்,' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை