உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சபரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக இயங்கும் 

சபரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக இயங்கும் 

திருப்பூர்: சென்னை ரயில்வே கோட்டத்தில் பணி நடப்பதால், சபரி எக்ஸ்பிரஸ் இயக்கம், நான்கு நாட்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால், பாலக்காடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அடுத்தடுத்த ரயில்வே ஸ்டேஷன் களுக்கு ரயில் வருவது தாமதமாகும். சென்னை ரயில்வே கோட்டத்தில் பணி நடப்பதால், திருவனந்தபுரம் - செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:20630) இன்று, நவ. 10, 12 மற்றும், 15ம் தேதி, காலை 6:45க்கு திருவனந்த புரத்தில் புறப்படும். வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில், மூன்று மணி நேரம், 45 நிமிடம் நிறுத்தப்பட்டு, அதன் பின் இயக்கப்படும். இதனால், பாலக்காடு, கோவை, திருப்பூர் உட்பட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து சேருவதில் தாமதம் ஏற்படும். வரும், 11ம் தேதி சில்சார் - கோவை ரயில் (எண்:12516), 50 நிமிடமும், கோரக்பூர் - திருவனந்தபுரம் ரயில் (எண்: 12511) 50 நிமிடமும் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ