உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெகிழிப்பையில் உணவுப் பொருள் தடையின்றி தொடரும் விற்பனை

நெகிழிப்பையில் உணவுப் பொருள் தடையின்றி தொடரும் விற்பனை

பல்லடம் : பல்லடம் வட்டாரப் பகுதியில், பல்வேறு உணவுப் பொருட்கள், நெகிழிப் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, காய்கறிகள், பழங்கள், பூ உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி, பேக்கரிகளிலும் நெகிழிப்பைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில், பருப்பு வகைகள், தானியங்கள், புளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், நெகிழிப்பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.இவற்றை வாங்கிச் செல்லும் நுகர்வோர், பொதுமக்கள் உணவுப் பொருட்களை பயன்படுத்திய பின், நெகிழிப் பைகளை பொது இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் மாசடையும். இதுதவிர, கண்ணுக்குத் தெரியாத வகையில், நெகிழிகள், உணவுப் பொருட்களுடன் கலந்து பாதிப்பினை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 25, 2024 10:38

பல்கடத்தில் மட்டும்தான் இது நடக்குதாக்கும். காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இதேதான். நம்ம ஒன்றிய அரசின் இண்டஸ்ட்ரியல் புரட்சி இது. ஜி.எஸ்.டி கட்டிட்டா கண்டுக்க மாட்டாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை