உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவாலயங்களில் சங்காபிேஷக பூஜை

சிவாலயங்களில் சங்காபிேஷக பூஜை

உடுமலை பகுதியிலுள்ள சிவாலயங்களில், கார்த்திகை, சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷக பூஜைகள் நடந்தன.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிேஷக பூஜை நேற்று நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில், 108 சங்குகள் 'ஓம்' வடிவில், அமைக்கப்பட்டு, யாக சாலை பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை மற்றும் ஹோம பூஜைகள் நடந்தன. காலை, 11:30 மணிக்கு, காசி விஸ்வநாத சுவாமிக்கு, 108 வலம்புரி சங்காபிேஷக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* முத்தையா பிள்ளை லே-அவுட் சோழீஸ்வரர் கோவில், ருத்ரப்பநகர் விசாலாட்சியம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், கார்த்திகை சோமவார சங்காபிேஷக விழா நடந்தது.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாதம் நான்காவது வார சோமவார சங்காபிேஷகம் பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர்,தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது.பூஜைக்கு பின், பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின், சிவபெருமானுக்கு சங்காபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நுற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி