மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
17-May-2025
உடுமலை; உடுமலை ஜி.டி.வி லே -அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.இக்கோவிலில், நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து சங்கல்பம், பீட பூஜை, கலச பூஜை நடந்தது.சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பதினாறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
17-May-2025