உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்தி நாயனார் குருபூஜை வழிபாடு

சத்தி நாயனார் குருபூஜை வழிபாடு

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட சிவாலயங்களில், சத்திநாயனார் குருபூஜை நேற்று நடந்தது. ஐப்பசி மாத பூச நட்சத்திர நாளில், சத்தியநாயனார் குருபூஜை நடத்தப்படுகிறது. திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம், அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், நேற்று சத்திநாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், அபிேஷகம் மற்றும்அலங்காரபூஜைகளை செய்தனர். சிவனடியார்களும், பக்தர்களும், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டத்தொகை பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ