உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ஆய்வு

தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ஆய்வு

திருப்பூர்; தாராபுரம் அருகே, சென்னக்கல்பாளையத்தை சேர்ந்த முருகன், 42. இவரது மனைவி, மணிமேகலை. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் 26ல், மேட்டுக்காடு தோட்டத்திலுள்ள வேப்பமரத்தில், இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், முருகன், துாக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரித்த அலங்கியம் போலீசார், முருகன் தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், முருகனை அடித்து, கொலை செய்து, தொங்கவிட்டதாகவும், மரணத்தில் மர்மம் உள்ளதால், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர், கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி, தாழ்த்தப்பட்டோர் ஆணைய (எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம்) உறுப்பினர்கள் குழுவினர், முருகன் மரணம் தொடர்பாக சென்னக்கல்பாளையத்தில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் நேற்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன், முருகன் துாக்கில் தொங்கிய இடத்தை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை