உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர்கள் களப்பயணம்

பள்ளி மாணவர்கள் களப்பயணம்

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா கல்வி நிறுவன மாணவர்கள் களப்பயணம் சென்றனர். வித்யநேத்ரா கல்வி நிறுவன மழலையர் பிரிவு மாணவர்கள், பொள்ளாச்சி ஜோதிநகர் பூங்காவிற்கு களப்பயணமாக அழைத்துச்செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை., உயிரியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆசிரியர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பூச்சிகளின் வகைகள், தன்மைகள் குறித்து விளக்கமளித்தனர். வேளாண் பல்கலை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. களப்பயணம் சென்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஊக்குவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ