உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர்கள் அறிவியல் களப்பயணம்

பள்ளி மாணவர்கள் அறிவியல் களப்பயணம்

உடுமலை: உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் அறிவியல் களப்பயணம் அழைத்துச்செல்லப்பட்டனர்.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், தேசிய விண்வெளி வார விழா கடந்த ஆக., மாதம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறிப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், போஸ்டர் தயாரித்தல், மாதிரிகள் தயாரித்தல் மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்கள், இரண்டு நாட்கள் அறிவியல் களப்பயணமாக சங்கங்களின் சார்பில் அழைத்துச்செல்லப்பட்டனர்.சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், பிர்லா கோளரங்கம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு களப்பயணமாக சென்றனர்.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி தமிழ்ச்செல்வி, பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் லெனின்தமிழ்கோவன், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மைய அலுவலர் குமார் உள்ளிட்டோர் மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினர்.மாணவர்களுக்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகள், விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களை விளக்கமளித்தனர்.இதுகுறித்த ஆச்சரியமூட்டும் பல்வேறு தகவல்களை, மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். இப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !