உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெயந்தி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஜெயந்தி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள ஜெயந்தி கிட்ஸ் அகாடமி பள்ளியில், முன்னாள் முதல்வர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி தாளாளர் கிருஷ்ணன், பள்ளி செயலாளர் கவிதா, பள்ளி முதல்வர் அலமேலு ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில், எல்.கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியிருந்தனர்.விண்வெளி சாதனையான சந்திராயன் 1, 2 மற்றும் 3, காற்றை சுத்தப்படுத்தும் கருவி, செயற்கைக் கோள் செயல்பாடு, நிலங்களின் வகைகள், நீர் சுத்திகரிப்பு, நுரையீரல் செயல்பாடு உள்ளிட்டவற்றின் மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை