மேலும் செய்திகள்
வகுப்பறையை மதுக்கூடமாக மாற்றிய விஷமிகளுக்கு வலை
28-Jul-2025
பல்லடம்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரித்து பட்டேல், 44. அருள்புரத்தில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். இரவு, வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த ஆசாமிகள் இருவர், வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். அவரது தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். பல்லடம் போலீசார், படுகாயம் அடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, அருண்குமார், 25, அஜித், 24 ஆகிய இருவரையும் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
28-Jul-2025