உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலைப்பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2ம்தேதி முதல் 13ம்தேதி வரை நடந்தது. 729 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.தற்போது மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று காலை கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. ஏற்கனவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து வர முடியாமல் விடுபட்ட மாணவர்களும், புதிதாக விண்ணப்பித்துள்ள மாணவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை