உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் விதைகள்

மானிய விலையில் விதைகள்

உடுமலை:குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. உடுமலை வட்டார வேளாண்துறையினர் கூறியதாவது: நடப்பு சீசனில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள குறிச்சிக்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மக்காச்சோள விதை 10 கிலோ, இயற்கை டானிக் 12.5 லிட்டர், நானோயூரியா அரை லிட்டர் ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படும். விவசாயிகள், 'சிட்டா, ஆதார் அடையாள அட்டை நகல், பாங்க் பாஸ்புக் நகல், போட்டோ-1 ஆகியவற்றுடன் துணை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். குறைந்த அளவே இருப்பு உள்ளதால், முதலில் வருபவர்களே முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை