உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொகுசு காரில் வந்து கஞ்சா விற்பனை 

சொகுசு காரில் வந்து கஞ்சா விற்பனை 

திருப்பூர்; காங்கயம் சுற்றுப்பகுதியில் போலீசார் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். கரூர் ரோடு, வீரணம்பாளையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர்.காரில் இருந்த காங்கயம், முள்ளிபுரத்தைச் சேர்ந்த பூபதி, 33, என்பவரை விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.காரில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, காரையும், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பின், பூபதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை