மூத்தோர் தடகள போட்டி
உடுமலை : மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில், உடுமலை தடகள வீராங்கனை ராதாமணி பதக்கங்களை பெற்றுள்ளார்.மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டி ஈரோட்டில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில், திருப்பூர் மாவட்டதின் சார்பில், உடுமலையைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஊர்க்காவல்படை பணியாளர் ராதாமணி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.நீளம் தாண்டுதல், 100 மீ ஓட்டப்பந்தயம், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். மேலும், மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.உடுமலை விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், விளையாட்டு சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் வெற்றி பெற்ற வீராங்கனைக்கு, பாராட்டு தெரிவித்தனர்.