உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.3.12 லட்சம் எள் வர்த்தகம்

ரூ.3.12 லட்சம் எள் வர்த்தகம்

வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 3.12 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது. வெள்ளகோவில், முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த எள் ஏலத்தில் சுற்றுவட்டார விவசாயிகள், 22 பேர் பங்கேற்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 2,329 கிலோ எள்ளை கொண்டு வந்தனர். கிலோ 112.10 முதல் 146.89 ரூபாய் வரை ஏலம் போனது. சராசரியாக, 138.39 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 2,329 கிலோ எள், 3.12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி