உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் 26 வழக்குகளுக்கு தீர்வு

ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் 26 வழக்குகளுக்கு தீர்வு

திருப்பூர் : திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில், 26 வழக்குகளில், 2.12 கோடி மதிப்பிலான தீர்வு காணப்பட்டுள்ளதாக மகாசபையில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில், 28 வது மகாசபை கூட்டம், 'சைமா' சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.கவுன்சில் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் பூபதி, இணைச் செயலாளர் ஸ்ரீகாந்த், துணை தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்'சைமா' சங்கத் தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' சங்க தலைவர் ரத்தினசாமி , 'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன், 'டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த், டைஸ் அண்ட் கெமிக்கல் சங்கத் தலைவர் நாகேஷ், சாய ஆலைகள் சங்க நிர்வாகி செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிர்வாக நலன் கருதி ஆர்பிட்ரேசன் கவுன்சிலின் தற்போதைய நிர்வாக குழு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தில் , கடந்த ஒரு ஆண்டில் 26 வழக்குகளில் , 2 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை