உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புயல் பாதிப்பு உதவிக்கரம்; சேவாபாரதி அழைப்பு

புயல் பாதிப்பு உதவிக்கரம்; சேவாபாரதி அழைப்பு

திருப்பூர்; பெஞ்சல் புயல் பாதித்த கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், புதுச்சேரி மாவட்டங்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி சார்பில், நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.இரண்டாம் கட்டமாக, திருப்பூர் கிளை சேவாபாரதி சார்பில், தன்னார்வலர்கள், பொதுமக்களிடமிருந்து ஆடை ரகங்கள் சேகரித்து அனுப்பப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, திருப்பூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.தார் பாய், போர்வை, ஆண், பெண், குழந்தைகளுக்கான டி-சர்ட் மற்றும் துணை வகைகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிவாரண பொருட்களை திருப்பூர் கல்யாணி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சேவாபாரதி மற்றும் பிரேரணா அறக்கட்டளையின் சிவாஜி மந்திர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.நன்கொடைகளை நிதியாகவும் அனுப்பிவைக்கலாம். புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பு வோர், 0421 2214222, 9677402185, 9894211005 என்கிற எண்களில் சேவாபாரதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என சேவா பாரதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி