சுரங்கப்பாலத்தில் கழிவுநீரால் பாதிப்பு
உடுமலை; உடுமலை, ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர் உள்ளிட்ட தெற்கு பகுதி குடியிருப்புகளுக்கு செல்ல பிரதான வழித்தடமாக, பெரியார் நகர் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, பாலத்தில் ஆண்டு முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி வருகிறது.இதனால், இப்பகுதியில் வசிப்போர் பல கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.