உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவால் அவலம்

ரோட்டில் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவால் அவலம்

திருப்பூர்; வடிகால்களிலிருந்து அப்புறப்படுத்திய கழிவுகள் ரோட்டில் குவித்து வைத்துக் கிடக்கிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காலேஜ் ரோட்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் காலனி பகுதி வழியாக முருங்கப்பாளையம் சென்று சேரும் ரோடு உள்ளது. பல்வேறு வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாக இது உள்ளது. மேலும், காலேஜ் ரோட்டையும், அவிநாசி ரோட்டையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்த ரோட்டில், சாமுண்டிபுரம் உள்ளிட்ட வடக்கு பகுதியிலிருந்து வந்து சேரும் மழை நீர் வடிகால் கட்டுமானம் அமைந்துள்ளது. இதில் சேகரமான மண் மற்றும் குப்பைக் கழிவுகள் வடிகாலிலிருந்து துார் வாரி அப்புறப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் வடிகால்களின் அருகே, ரோட்டோரம் கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல நாட்களாகியும் இதை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. சில இடங்களில் இந்த மண் குவியல்கள் சரிந்து ரோடு வரை பரவியும் கிடக்கிறது. இதுபோல் இடையூறாக உள்ள மண் மற்றும் கழிவு குவியல்கள் அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை