உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிடப்பில் சாக்கடை கால்வாய் பணி

கிடப்பில் சாக்கடை கால்வாய் பணி

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் ஊராட்சி, காமாட்சியம்மன் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் வீட்டு முன் தேங்கி அசுத்தம் ஏற்படுத்தி வந்தது.இதனால், கால்வாய் கட்ட கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சியில் கோரிக்கை விடுத்து வந்தனர். ஊராட்சி சார்பில், வீதியின் ஒரு பக்கத்தில் சாக்கடை கால்வாய் மற்றும் உறிஞ்சு குழி அமைக்க 15வது நிதி குழு திட்டத்தின் கீழ் ஒன்பது லட்சத்து, 58 ஆயிரத்து, 740 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. ஆனால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணி முழுமை பெறாமல் உள்ளது. சாக்கடை கால்வாய் கட்டப்படாத இடத்தில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் வீதியில் தேங்கி வருகிறது.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'கழிவு நீர் தேக்கத்தால், துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நோய் பரவும் ஆபத்து உள்ளது. விடுபட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் தேக்கத்தை தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை