உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்

உடுமலை; குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில், பாலியல் குற்றங்கள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில், சங்கரமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கண்ணீஸ்வரி, மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு முடியம் வரை மாலை நேர சிறப்பு வகுப்புகளும் துவக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ