உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லுங்க! குறை தீர் கூட்டத்தில் குமுறல்

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்லுங்க! குறை தீர் கூட்டத்தில் குமுறல்

உடுமலை; உடுமலையில் வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வனச்சரக அலுவலகத்தில் நேற்று நடந்தது. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி, வன எல்லையிலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமங்கள் வரை காட்டுப்பன்றிகள் பரவியுள்ளன.இவற்றால், தென்னை, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் என அனைத்து பயிர்களும் சேதமடைந்து வருகின்றன. ஓடைகள், குளம், குட்டைகளில் பதுங்கியுள்ள அவை, கூட்டம், கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.பயிர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகள் மற்றும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பயிர் சேதம் மட்டுமல்லாமல், மனித உயிர்களும் பாதிக்கும் அவலம் உள்ளது.எனவே, அரசு அறிவித்தபடி, வன எல்லைக்கு வெளியிலுள்ள காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல, வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், வன விலங்குகளால் பாதிக்கும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.வனச்சரக அலுவலர் பேசுகையில், ''காட்டுப்பன்றிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை