உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

திருப்பூ : திருப்பூர் - பல்லடம் ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திலுள்ள கடைகள் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வாடகை செலுத்தாதோருக்கு இறுதி அறிவிப்பு வழங்கப்பட்டு, கடந்த செப்., 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.அவகாசம் முடிவடைந்த நிலையில், வாடகை செலுத்தாத எட்டு கடைகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூட வாடகை வசூல் குழுவினர் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர். வாடகை செலுத்தாத உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை