குறுமைய போட்டிகள் கிட்ஸ் கிளப் அசத்தல்
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கால்பந்து போட்டியில், 19 வயது மாணவியர் பிரிவில் கிட்ஸ் கிளப் பள்ளி அணி இரண்டாமிடம் மற்றும் கூடைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். 19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜை பந்து போட்டியில், இப்பள்ளி மாணவியர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.