ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி சி.ஏ., இன்டர் வகுப்பு ஆரம்பம்
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில் சி.ஏ., இன்டர் வகுப்பு ஆரம்பமாகியுள்ளது. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில் சி.ஏ., இன்டர் மீடியட் முழு நேர பயிற்சி வகுப்புகள், நாளை (28ம் தேதி) முதல் துவங்க உள்ளது. கல்லுாரி படிப்பு முடித்தவர்களும், சி.ஏ., பவுண்டேஷன் தேர்ச்சி அடைந்த மாணவர்களும் சேர்ந்து படிக்கலாம். கடந்த, 12 ஆண்டுகளாக சி.ஏ., படிப்பிற்கென்றே குரு சர்வா அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பயின்ற பல மாணவர்கள் இன்று ஆடிட்டர்களாக இருக்கின்றனர். சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில் தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது. சி.ஏ., இன்டர் தேர்வில் பயின்ற மாணவர்கள், தேசிய அளவில் மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். அட்மிஷன் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, 96009 22888 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.