உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுருங்கிய கடை வீதி வாகன ஓட்டிகள் தவிப்பு

சுருங்கிய கடை வீதி வாகன ஓட்டிகள் தவிப்பு

பல்லடம: பல்லடம் நகராட்சி, கடைவீதியில், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, உழவர் சந்தை, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அமைந்துள்ளன. வணிக ரீதியான ஒட்டுமொத்த கடைகளும் இப்பகுதியில் உள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக இது உள்ளது.இங்குள்ள வணிக வளாகங்கள் பலவற்றில் முறையான பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. இதனால், கடைவீதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் ரோட்டில் தான் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. நடைபாதை வியாபாரிகள் ஒரு பக்கம் கடை அமைக்க, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும், நடு ரோட்டில்தான் நிறுத்தப்படுகின்றன.இதனால், 60 அடி அகலம் கொண்ட என்.ஜி.ஆர்., ரோடு, 15 அடியாக சுருங்கி விட்டது. ஒவ்வொரு பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில், நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இவ்வாறு, கடைவீதியில் உள்ள வணிக வளாகங்கள் எதிலுமே பார்க்கிங் வசதி செய்யப்படாத நிலையில், நகராட்சியும் இது குறித்து நீண்ட காலமாக கண்டுகொள்ளாமல் உள்ளது. பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை