பெண்களுக்கு திறன் பயிற்சி
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், ஆதரவற்ற பெண்கள், திருநங்கையருக்கான சுய வேலைவாய்ப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமை வகித்தார். திறன் மேம்பாட்டு கழக திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர். விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் வாயிலாக சுய தொழில் மானியம் பெறுவதற்கு, வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினராக இருக்கவேண்டும். வயது வரம்பு, 25 முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெறமுடியும். சுய அறிவிப்பு சான்று, வருமான சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முகவரி சான்று விவரங்களுடன் மானியம் பெற விண்ணப்பிக்கவேண்டும். வாரிய உறுப்பினராக இணைய, https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.