ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி ஆண்டு விழா
திருப்பூர்: திருப்பூர், அம்மாபாளையம், 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில், 'சீரா' விருது வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா ஆகியன நடந்தன. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் டாக்டர் ஷியாமளா ரமேஷ்பாபு பங்கேற்று பேசினார். பள்ளி சேர்மன் சிவசாமி உள்ளிட்டோர் பேசினர். நிர்வாக அறங்காவலர் நடராஜன் பங்கேற்றார். முன்னதாக பள்ளி முதல்வர் ராஜேந்திரபிரசாத் வரவேற்றார். பள்ளி இயக்குனர் ஜனபாரதி, செயலர் தினகரன், துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.படிப்பு, பல்வகை திறமைகளுக்காக 'சீரா' விருதுகள் வழங்கப்பட்டன. பெற்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.