வீட்டு உபயோக பொருட்களுடன் ஸ்மைலி எக்ஸ்போ துவக்கம்
திருப்பூர்; திருப்பூர், லட்சுமி திருமண மண்டபத்தில் 'ஸ்மைலி எக்ஸ்போ' வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சியை, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்ரமணியம், 'சைமா' துணைத்தலைவர் பாலச்சந்தர், கிட்ஸ் கிளப் மோகன் கார்த்திக் ஆகியோர் கண்காட்சி வளாகத்தின் ஒவ்வொரு அரங்கையும் திறந்துவைத்தனர்.முன்னதாக லக்கி கேர்ள்ஸ் பியூட்டி காஸ்மெடிக்ஸ் அண்ட் லைப் ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் விஜி, ேஹதயா ஆர்ட் காலரி ரமா ராஜேஷ், அவிநாசி கிழக்கு ரோட்டரி விசித்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். ஸ்மைலி குழும நிர்வாக இயக்குனர் அருண், எம்.எஸ்.ஆர்., குழும நிர்வாக இயக்குனர் செந்தில், எம்.எஸ்.ஆர்., மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளில் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.