சாப்ட்வேர் பயிற்சி
திருப்பூர்: தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமரன் அறிக்கை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. ஆகிய படிப்புகளில் இறுதியாண்டு பயில்பவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இளநிலை மென்பொருள் மேம்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு தரவுகள் பொறியாளர், மென்பொருள் மேம்பாட்டாளர் உட்பட 40 தொழிற்பிரிவுகளில், மென்பொருள் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். ஏதாவது ஒருபிரிவில் பயிற்சி பெறலாம். பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை, பி.என்., ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.