மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் துாய்மை பணிகள்
23-Mar-2025
பொங்கலுார் ஒன்றியம், கழுவேறிபாளையம் வழியாகச் செல்லும் ரோட்டின் குறுக்கே ஓடையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் கீழே குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நீர் நிலை மாசுபடுகிறது. கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதால் ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். இனிமேலும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில், என்.எஸ்.எஸ்., திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 2,082 நிகழ்ச்சி நடத்திய, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு - 2 ஒருங்கிணைப்பாளர், டாக்டர் மோகன்குமாருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பாலத்தின் சுவர் உடைந்தது
பொங்கலுார் வழியாக செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில், காட்டூர் அருகே பாலம் கட்டப்பட்டுள்ளது. பிரதான வாய்க்கால் என்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வாய்க்காலில் தவறி விழாமல் இருப்பதற்காக பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது ,அந்த சுவர் உடைந்து விட்டது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பாலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடிந்த சுவரை முற்றிலும் அகற்றி விட்டு, புதிய சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தடைபட்டு கிடக்கும் கால்வாய்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் அருகே, மூளிக்குளம், 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அணைக்காடு தடுப்பணையில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் வழங்கும் ராஜ வாய்க்கால், 2.50 கி.மீ., நீளம் செல்கிறது. பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இக்குளம் உள்ளது. நீர் வரும் கால்வாய், மண், புல் திட்டுகளால் அடைபட்டு, தடைபட்டு கிடக்கிறது. இதே போன்று, பல்வேறு இடங்களில் கால்வாய் தடைபட்டிருப்பதால், மழைக்காலங்களில் நீர் வரத்து தடைபடும். எனவே, நீர் வள ஆதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியருக்கு விழிப்புணர்வு
அவிநாசி அருகே பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்., மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியருக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக, மாணவியர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை குறும்பட வீடியோ வாயிலாக, மாணவியருக்கு விளக்கப்பட்டது. மேலும் அதி தொழில் நுட்பமான 'ஏஐ' கொண்டு எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது குறித்தும் போலீசார் விளக்கம் அளித்தனர். மொபைல் போன் மற்றும் சமூக வலைதளத்தால், பாதிக்கப்படும் மாணவியர், 1091, 1098 போன்ற இலவச போன் எண்களை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். பள்ளி தாளாளர் ராதாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Mar-2025