மேலும் செய்திகள்
ராமானுஜர் வர்ண தர்மத்தை மீறினாரா?
06-Sep-2025
சுமுக தீர்வு ஏற்படும் இரு தரப்பு நம்பிக்கை
16-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குஜராத் வர்த்தகர் சபை பிரதி நிதிகள், 'நிப்ட்-டீ' கல்லுாரி மற்றும் ' அடல் இன்குபேஷன்' சென்டரை நேற்று, பார்வையிட்டு, பணிகளை கேட்டறிந்தனர். இந்தியாவின், துணி உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது தெற்கு குஜராத். அப்பகுதியில் உள்ள துணி விற்பனையாளர்களுடன் இணைந்து, திருப்பூருக்கு தேவையான, புதிய ரக துணிகளை பெறுவது என்றும், திருப்பூரை போல்,ஆடை உற்பத்தி மையங்களை குஜராத்தில் அமைக்கவும் பரஸ்பரம் முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆக., மாதம், திருப்பூரை சேர்ந்த வர்த்தக பிரதிநிதிகள் குழு, தெற்கு குஜராத் வர்த்தக சபைக்கு சென்று, அங்குள்ள தொழில் அமைப்புகளை சந்தித்து பேசியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று, தெற்கு குஜராத் வர்த்தக சபை பிரதிநிதிகள், திருப்பூர் வந்திருந்தனர். 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு சென்ற குழுவினர், 'அடல் இன்குபேஷன்' சென்டரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'பின்னலாடை மற்றும் துணி தொழில்துறை வளர்ச்சிக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில், தெற்கு குஜராத் குழுவினர் வந்துள்ளனர். தொழில் மற்றும் கல்வி இணைப்பு வாய்ப்புகளை ஆராய்ந்து, 'நிப்ட்-டீ' கல்லுாரி, 'அடல் இன்குபேஷன்' மையம் மூலமாக, புதிய தொழில்முனைவு மற்றும் புதுமை வளர்ச்சி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில், பகிர்ந்துணர்வு, அறிவியல் பரிமாற்றம், தொழில்நுட்ப பகிர்வு, தொழில் - கல்வி கூட்டாண்மை போன்ற பல புதிய வாய்ப்புகளை, திருப்பூருக்கு உருவாக்கும்,' என்றனர்.
06-Sep-2025
16-Sep-2025