விண்வெளி வாரவிழா போட்டி; மாணவர்கள் பங்கேற்பு
உடுமலை : உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், சர்வதேச விண்வெளி வார துவக்க விழா போட்டிகள் நடந்தது.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், சர்வதேச விண்வெளி வார விழா அக்., 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்கவிழா அந்தியூர் கமலம் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இக்கல்லுாரி முதல்வர் நித்யாதேவி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள், தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கொடைக்கானல் சூரிய ஆய்வக விஞ்ஞானி கிரிஷ்பின்கார்த்திக், விண்வெளி வார விழா கொண்டாடுவது குறித்தும், நடப்பாண்டின் கருப்பொருளான விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும், சூரிய ஆய்வகத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகள் பற்றியும் விளக்கமளித்தார்.தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நிறைவு விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.