உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு பஸ் இயக்கம்

சிறப்பு பஸ் இயக்கம்

தீபாவளி முடிந்து விட்டதால், இந்த வாரம், திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். இருப்பினும், இன்றும், வரும், 3ம் தேதியும் வளர்பிறை முகூர்த்தம் என்பதால், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 பஸ்களும், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 20 பஸ்களும் என மொத்தம், 55 இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்கு பின் வெளியூர் பஸ்களில் கூட்டம் குறைந்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் விசேஷ தினங்களை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் மாறுபடும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை