உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்

தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர்; தேசிய தடுப்பூசி அட்டவணையை பின்பற்றி, மொத்தம், 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. காசநோய், கல்லீரல் தொற்று, புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்புளூயன்சா, நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை துவங்கி, மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இருந்த போதும், முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவது இல்லை.இதனால், 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கு அனைத்து இடங்களிலும் எட்ட முடியாத நிலை தொடர்கிறது. இதனை மாவட்ட அளவில் கண்காணிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தி பொதுமக்கள், தாய்மார்களுக்கு வழிகாட்ட வேண்டும். நிமோனியா, மூளை காய்ச்சல், தொண்டை வீக்கம் உள்ளிட்ட ஐந்து வகையான நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகளுகக்கு புதன் மற்றும் வெள்ளிதோறும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சுகாதார நிலையங்களை நாடலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி