உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 15ல் சிறப்பு முகாம் துவக்கம்

வரும் 15ல் சிறப்பு முகாம் துவக்கம்

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள், வரும் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளன. மாநகராட்சி பகுதியில் 20 முகாம்கள்; நகராட்சிகளில் 56; பேரூராட்சிகளில் 28; ஊராட்சிகளில் 221 என, மாவட்டம் முழுவதும் மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இம்முகாம்களில், நகர பகுதிகளில் 13 அரசு துறைகள் மூலமாக 43 சேவைகளும்; கிராம பகுதிகளில், 15 துறைகள் வாயிலாக, 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள், இம்முகாமில் பங்கேற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தன்னார்வலர்கள் வாயிலாக, வீடு வீடாகச்சென்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, துவங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம், அவிநாசி ஒன்றியத்தில், கணியம்பூண்டி ஊராட்சி உள்பட மாவட்டம் முழுவதும், வீடு வீடாக செல்லும் தன்னார்வலர்கள், பொதுமக்களிடம், விண்ணப்ப படிவங்களை வழங்கிவருகின்றனர்; முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை